சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணிக்கு துமித் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழாமில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பதிரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடர் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.