மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ரயிலின் ஒரு பெட்டியல் ஏற்பட்ட தீ தொடர்ந்து மற்ற பெட்டியிலும் பரவியதாக சொல்லப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேசத்தை மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயில் மூலம் கடந்த 17-ம் தேதி தமிழகம் வந்துள்ளனர். ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து ரயில்வே போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

முதற்கட்ட விசாரணையில் ரயிலில் இருந்த பயணிகளில் சிலர் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைத்துள்ளனர் அப்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *