கனடா வாழ் தமிழர்கள் கொண்டாடும் ” தமிழ் தெரு விழா” நாளை டொரோன்டோ ஸ்காபுரோவில் ஆரம்பமாகிறது.
26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம்பெறும் இந்த நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கலந்து சிறப்பிக்கிறார்.
ஆரம்ப நிகழ்வு நாளை நண்பகல் 12 மணிக்கு மார்க்கம் ரோட்டில் ( மெக்னிக்கல் – பாஸ்மோர் இன்டர் செக்ஸன்) ஆரம்பமாகிறது.
தமிழகத்தின் இசைக்கலைஞர்கள். ஈழத்து கலைஞர்கள் மற்றும் கனேடய கலைஞர்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.
இவை இரு மேடைகளில் மகிழ்விக்க இருக்கின்றன.
திருவள்ளுவர் மேடை ( மார்க்கம் மற்றும் மெக்னிக்கல்) பாரதியார் மேடை ( மார்க்கம் பாஸ்மோர் மற்றும் ரெட் கார்ப்பட்)
ஆகஸ்ட் 26 ஆம் திகதி மெகா டியூனரிஸ் இசை நிகழ்ச்சி திருவள்ளுவர் மேடையிலும் சுப்பர் சன்ஸ் பாரதியார் மேடையிலும் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றனர்.
ஆகஸ்ட் 27 ஆம் திகதி Shianaz இசைக்குழு திருவள்ளுவர் மேடையிலும் பேஸ்மன்ட் குரூவ் பாரதியார் மேடையிலும் நடத்துகின்றனர்
அனைவரும் வாரீர்…