மன்னார் மாவட்டத்தில் பாடல் தளமாக விளங்கும் திருக்கேதீச்சரத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாகத் திகழும் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத் திருவிழாவின் ஆறாம் நாள் அண்ணபூரணி திருவிழா திங்கள் கிழமை (21) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது ஆலயத்தைச் சுற்றி பக்தர்களால் பொங்கல் பொங்கி அம்பிகைக்கான நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமாக திருச்சி தேவா எனப்படும் நானாட்டான் பிரதேசத்தின் சங்கீத வித்துவானாகவும் இசைப் பேராசிரியராகவும் இருக்கும் மாசிலாமணி தேவபாலன் அவர்களின் இசைக் கச்சேரி இடம்பெற்றது.
இதைத் தொடர்ந்து ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போற்ற சங்கீதப் பேராசிரியர் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்
இந்த மதிப்பளிப்பினை நானாட்டான் பிரதேசத்தின் பக்திக் கலைஞராக உள்ள திரு.கந்தசாமி அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார்
இந்த நிகழ்வில் அம்பிகையின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)