மலைவாஞ்ஞன்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இந்த ஆண்டு 2,888 மத்திய நிலையங்களில் பரீட்சை இன்று 15 ம் திகதி காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள பரீட்சைக்கு 3,37,596 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
மேலும், பரீட்சையில் மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சையில் மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
மலையகப் பகுதியில் சீரற்ற காலநிலையினையும் பொறுப்படுத்தாது மாணவர்கள் மிகவும் ஆர்வமாக பரீட்சைக்கு தோற்றினர்.
ஹட்டன் கல்வி வலயத்தில் இவ்வருடம் பரீட்சைக்கு 34 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறுகின்றன.
இந்த பரீட்சைக்கு தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளிலிருந்து 4140 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
குறித்த பரீட்சைக்கு ஹட்டன் நோர்வூட் மஸ்கெலியா லக்ஸபான கடவலை உள்ளிட்ட பிரதேசங்களில் ஐந்து இணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயம் தெரிவித்துள்ளது.
இதே நேரம் சகல பரீட்சை நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் சகல பரீட்சை நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.