மழையினால் ஒன்பது மாவட்டங்களில் 2,511 குடும்பங்களை சேர்ந்த 10,055-க்கும் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தங்களால் 7 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மாத்தறை, காலி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே கிங், நில்வளா கங்கைகளில் சிறு அளவிலான வௌ்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.