மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் அநாதவரான குடும்பங்களுக்கு அதே இடத்தில் வீடு, அத்துடன் தோட்டத்தின் உதவி முகாமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பேன் என இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் கூறுகிறார்.
இன்று காலை கொழும்பில் ஒலிப்பரப்பாகும் சூரியன் Fm வானொலிக்கு அளித்த பேட்டியிலேயே இதனை பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறினார்.
தமது தொப்புள் கொடி உறவுகளுக்கு ஏற்பட்ட இன்னல்களை அறிந்தும் கவைப்பட்ட அவர் எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் என்று சொன்னார்.
அத்தோடு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரனவின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு உதவி முகாமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.