மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. இதன்படி, இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் ஆகும்.
அதற்கு 3 மணிநேரத்திற்கு முன்னர், 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது அதிகாலை 2.53 மணியளவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான அந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.