மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க ஊடகப்பிரிவினரால் படசாலையின் பழைய மாணவர் சங்கத்துக்கான தனியான முகநூல் பக்கமொன்று தொடங்கப்பட்டுள்ளது.

 

அதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (25.08.2023) மாலை இஷாத்தொழுகையின் பின் 08.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஏ.ஜே.மர்ஸுக் (SLEAS) தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கோட்டக் கல்விப்பணிப்பாளரும், மூத்த ஊடகவியலாளருமான எம்.சுபைர் கலந்து கொண்டு முகநூல் பக்கத்தினைத் தொடங்கி வைத்தார்.

ஊடகக்குழுப்பொறுப்பாளர் ஏ.எம்.எம்.மபாழில் ஆசிரியரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலய அதிபர் எம்.சி.ஐயூப்கான் அவர்களும் பழைய மாணவர் சங்க ஊடகக்குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் உரை நிகழ்த்திய அதிபர் தனதுரையில், பாடசாலை எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் ஊடகக் குழுவினர் ஆற்ற வேண்டிய பங்களிப்புக்கள் குறித்தும் விளக்கினார்.

அதிதி தனதுரையில், சவால்களையெல்லாம் முறியடித்து துணிந்து பாடசாலையை முன்னெடுத்துச்செல்லுங்கள் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாய் இருப்போம் என்றார்.

01. பாடசாலைக்கும் பழைய மாணவர்களுக்குமிடையிலான நட்புறவை வளர்த்தல்.

02. பாடசாலைச்செயற்பாடுகளை பகிரங்கப்படுத்தி பாடசாலைச் சமூகத்திற்கும் பெற்றோருக்குமிடையிலான இடைவெளியினை அகற்றல்.

03. பாடசாலையின் அபிவிருத்திச்செயற்பாடுகளில் பெற்றோர், பழைய மாணவர்களையும் பங்காளிகளாக இணைத்தல்.

04. பாடசாலை மாணவர்களின் கல்வி, கலை, விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளில் பெறப்படும் சிறப்பு அடைவுகளை உலகறியச்செய்தல்.

05. மிக நீண்ட காலமாக பாடசாலைக்குப் பங்காற்றி வரும் வெளிநாடுகளில் வசிக்கும் எமது பெறுமதிமிக்க பழைய மாணவர்களின் நேரடிப்பார்வைக்கு பாடசாலைச் செயற்பாடுகளை முன்கொண்டு செல்லல்.

போன்ற உயரிய நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பக்கத்தில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர்கள் அனைவரும் இப்பக்கத்தில் இணைந்து கொள்வதுடன், ஏனைய பழைய மாணவர்களுக்கும் இப்பக்கத்தினை அறிமுகம் செய்து அவர்களும் இணைந்து கொள்ள உதவுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *