கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் டொயோட்டா ரக வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

டொயோட்டா ரக சில வாகனங்களில் காணப்படும் குறைபாடு காரணமாக இந்த மாடல் வாகனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனத்தின் பிளாஸ்டிக் எரிபொருள் குழாயில் காணப்படும் பிரச்சினை காரணமாக இந்த வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட Tundra and Tundra Hybrid pickup trucks ஆகிய மாடல்களே இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இவ்வாறு குறித்த வாகனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து 17,299 வாகனங்களும் அமெரிக்காவிலிருந்து 168000 வாகனங்களும் இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாடல் வாகனத்தின் எரிபொருள் குழாயில் கசிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே குறித்த வாகனம் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *