39 பணியாளர்களுடன் இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பலில் இருந்த 7 பேரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் குழுவினர் கப்பலின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அங்கிருந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய்கிழமை சீன மீன்பிடி கப்பல் “Lupeng Yuanyu 028” இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளானது.
17 சீன பிரஜைகள், 17 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் கப்பலில் பணிபுரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் பாகங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.