மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் பிரன்டன் கிங் 42 ஓட்டங்களையும், ரோவம் பவல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் குல்தீப் யாதவ் மூன்று விக்கட்டுகளை பெற்றுக் கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இதில் சூர்யகுமார் யாதவ் 83 ஓட்டங்களையும் திலக் வர்மா 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் அல்ஸாரி ஜோசப் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியுனார்.
ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த ரி20 தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கின்றது.