மேல் மாகாணத்தில் இன்று (26) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
மேல் மாகாணத்தில் நிலவும் டெங்கு நோயின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 27800 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.