LPL2023யின் 9 வது போட்டி பல்லேகலையில் இன்ற இரவு நடைப்பெற்றது. இதில் வனிந்து ஹசரங்க “சிங்கம்  சிங்கிளாக வரும் ” என்ற  தோரணையில் தனியான ஆட்டம் ஆடி யாழ் கிங்ஸை திணறடித்தார்.

நாணய சுழற்சியல் வெற்றிப்பெற்ற Be Love கண்டி அணி உடனடியாக யாழ் கிங்ஸை துடுப்பெடுத்தாட அழைத்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் கிங்ஸ் வனிந்து ஹசரங்கவின் துல்லியமான பந்தை எதிர்நோக்க முடியாமல் திணறியது.

யாழ் கிங்ஸ்  தமது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 117 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதில் துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களை பெற்றார். கண்டி அணி சார்பாக பந்து வீச்சில் வனிந்நு ஹசரங்க 4 ஓவர்கள் வீசி 9 ஓட்டங்களை கொடுத்து 3. விக்கெட்டுக்களை கைப்பற்றினார்

 

வெற்றி இலக்கான 118   ஓட்டங்களை பெறும் நோக்கில் ஆடுகளம் நுழைந்த கண்டி அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை பெற்று வெற்ளியீட்டியது.

இதில் வனிந்து ஹசரங்க 22.  பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5.  பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களுடன் ஆட்டநாயகனாக தெரிவானார்.

இதன்படி இது வரை நடந்த போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் காலி அணி முதல் இடத்தில் இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *