ஒடிசாவில் கடந்த 2ம் திகதி மாலை சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மீண்டும் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது.
இந்த விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகளை 1000க்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டனர்.
தொடர்ந்து ரயில் தடம் சீரமைப்பு மற்றும் மின்சார இணைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், விபத்து ஏற்பட்ட பாஹானா பகுதியில் சுமார் 51 மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
தற்போது அங்கு இரண்டு பிரதான ரயில் தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
முதல் ரயிலாக சரக்கு ரயில் ஒன்று அந்த தடத்தில் இயக்கப்பட்டுள்ளது.
இதனை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.