ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் , அனைத்து அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச துறை நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர் குழாம் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்குமான திறந்த போட்டிகள் மற்றும் வெளிநாட்டவர்ளுக்கான போட்டிகள் அடங்கிய “வசந்த சிரிய 2023” (வசந்தத்தின் வனப்பு 2023) தமிழ் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 22 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் மைதானததில் நடைபெறும்.
காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதோடு மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத் துறை, திறந்த பிரிவு மற்றும் விருந்தினர் பிரிவு என 3 பிரிவுகளின் கீழ் போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.