தகவல் :
நியாஸ் ஹாஜியார்
அகீல் அவசர சேவைப்பிரிவு
வாகரை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த இரு இளைஞர்கள் காயம்டைந்துள்ளனர்.
நேற்று (29) மாலை 7 மணியளவில் திருமலை – வாகரை வீதியில் வாகரையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி வரும் வழியில் உசன ஏற்றத்தில் வைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டமாவடியைச்சேர்ந்த நபரொருவருக்குச் சொந்தமான சிறிய ரக லொறியொன்றுடன் மோதுண்டதில் இரு இளைஞர்கள் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் செம்மண்ணோடை, பாடசாலை வீதியைச்சேர்ந்த நிதாஸ் மற்றும் மீராவோடை எல்லை வீதியைப்பிறப்பிடமாகவும் பொத்தானையை இருப்பிடமாகவும் கொண்ட முஹம்மது இக்ரம் ஆகிய இருவருமே காயமடைந்தவர்களாவர்.
காயமுற்ற நிலையில் இரு இளைஞர்களும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.