கனடாவில் முன்னணி பேக்கரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கனடா பிரட் நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வாடிக்கையாளர்களுக்கு தீங்கிழைத்த நிறுவனம் ஒன்றின் மீது 50 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விலை நிர்ணய சதியில் ஈடுபட்டதாக இந்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டினை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
கனடிய வரலாற்றில் விலை நிர்ணய மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் நிறுவனம் ஒன்றின் மீது விதிக்கப்பட்ட அதிகட்ச அபராத தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் போட்டி கண்காணிப்பு அமைப்பு இந்த விசாரணைகளை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் அநீதியான முறையில் பானின் விலையை அதிகரித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
விலை நிர்ணயம் செய்வதில் இந்த நிறுவனம் சதி வேலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் இரண்டு தடவைகள் மோசடியான முறையில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.