பிரதான புகையிரத பாதையின் வில்வத்த புகையிரத கடவையில் ரயில் ஒன்று கொள்கலனுடன் மோதியதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் புகையிரத இயந்திரத்திற்கு கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ரயில்வே துணைப் பொது மேலாளர் எம்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.

 

புகையிரத இயந்திரம் பாரிய சேதம் ஏற்பட்டமையினால் இயந்திரத்தை மற்றுமொரு இயந்திரம் மூலம் இழுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்குப் பின்னரே ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இன்று (09) காலை இடம்பெற்ற புகையிரத விபத்தினால் பிரதான பாதையில் இயங்கும் புகையிரத சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இரட்டைப் பாதையின் ஒரு பாதை மாத்திரம் ரயில் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.

விபத்தையடுத்து இயக்கப்படவிருந்த 12 புகையிரதங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அவை ஒவ்வொன்றாக ஒற்றைப் பாதையில் இயக்கப்படும் என ரயில்வே துணைப் பொது மேலாளர் எம்.ஜே.இதிபொலகே குறிப்பிட்டார்.

எனினும், ரயில் தாமதமாக வரலாம் என பிரதிப் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விபத்து காரணமாக பஸ்யால சந்தியில் இருந்து மீரிகம மற்றும் நெடுஞ்சாலை நுழைவாயில் நோக்கிய போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது

நன்றி டெ.சி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *