வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை புதுக்குடியிருப்பிலிருந்து மலையகம் நோக்கிய நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமானது
புதுக்குடியிருப்பிலிருந்து மலையகம் நோக்கிய நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமானது.
நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் ஆரம்பமான நடைபயணம் கிளிநொச்சியில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று காலை 9 மணியளவில் டிப்போ சத்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி இரணைமடு சந்தி, முறிகண்டி, மாங்குளம் என கடந்து வவுனியா நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
மன்னாரிலிருந்து மலையகம் நோக்கிய பயணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, மதவாச்சி பகுதியில் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.