அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞர் ஒருவரும், யுவதியும் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு ஸ்டிதரன் தோட்டப் பகுதியிலேயே இன்று மாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள், அதிக வேகத்தால் சறுக்கி சென்று, ‘காட் கல்லில்’ மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. மேலதிக விசாரணைகளை அட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.