இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி நியூயோர்க் நகரில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்த கிளம்ப ஆயத்தமான ஹாரி மற்றும் மேகன் தம்பதியை புகைப்பட கலைஞர்கள் துரத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

இவர்களுடன் மேகனின் தாயாரும் பயணம் செய்திருக்கிறார்.

சுமார் இரண்டு மணி நேரம் கார் சேசிங் நடைபெற்றதாக இளவரசர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது.

எனினும், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதே போன்று 1997 ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர்கள் படம் எடுப்பதற்காக வாகனத்தை துரத்திய போது ஏற்பட்ட கோர விபத்தில் ஹாரியன் தாயார் இளவரசி டயானா பலியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *