அஸ்ரப் அலீ
ஹோமாகம தொழிற்பேட்டையில் இன்று முன்னிரவு தொடக்கம் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது
ஹோமாகம, கட்டுவன பிரதேசத்தில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது
இதனையடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடாக ஹோமாகம மற்றும் கட்டுவனை பிரதேசங்களுக்கு வௌியார் வருகை தருவதைத் தவிர்க்குமாறும் பிரதேசத்தில் வசிப்பவர்கள் முகமூடி அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் குறித்த பிரதேசங்களில் இருக்கும் குடிநீர்க் கிணறுகளை மூடிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது