ராமு தனராஜா

பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு விஷம் வைத்து கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் பண்டாரவளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸாருக்கு நேற்று (24) பிற்பகல் தகவல் கிடைத்தது.

அதன்படி, களனி கொனவல பிரதேசத்தைச் சேர்ந்த ஐம்பது வயதுடைய ஒருவரே குறித்த பெண்ணை நேற்று ஹோட்டலுக்கு அழைத்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் திடீரென ஹோட்டலை விட்டு வெளியேறியதால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் இருந்த அறையை சோதனையிட்டனர்.

அங்கு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டு விஷம் அருந்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அடம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் திருமணமானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலைமறைவான சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *