அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் தேர்பவனி

Share

Share

Share

Share

நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நேற்று தைப்பூசத்தினை முன்னிட்டு தேர்பவனி சிறப்பாக இடம்பெற்றது.

இந்த தேர் பவனியினை முன்னிட்டு விநாயகர் வழிபாடு,திரவிய அபிசேகம், அலங்காரபூஜை, வசந்த மண்டப பூஜை ஆகியன இடம்பெற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமானின்  வீதி உலாவும் இடம்பெற்றது.

இந்த தேர் பவனி அட்டன் சிவ சுப்பிரமணிய தேவஸ்த்தானத்தில் ஆரம்பித்து ஹட்டன் சுற்றுவட்ட வீதி ஊடாக பண்டாரநாயக்க டவுன் வரை சென்று மீண்டும் திரும்பி பிரதான வீதி ஊடாக மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்து.

நீண்ட இடைவெளிக்கு பின் இடம்பெற்ற இந்த தேர் பவனியில் காவடி,பரவக் காவடி உள்ளிட்ட கலை கலாசார அம்சங்களும் இடம்பெற்றன.

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சந்திராநந்த சர்மா ஆலய பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேர் பவனியில் பெரும் எண்ணிக்கையிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

(அந்துவன்)

 

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...