ஒன்றாரியோவில் அண்மையில் காணாமல் போன விமானம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த சிறிய விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து கனேடிய விமானப்படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் விமானத்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் பயணம் செய்தவர்களை உயிருடன் மீட்க முயற்சிக்கப்பட்ட போதிலும், அந்த முயற்சி கைகூடவில்லை என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒன்றாரியோவின் ச்சாவுசர் குளத்தில் இந்த விமானம் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொலைந்த விமானத்தை தேடும் பணிகளுக்கு பெரும் எண்ணிக்கையிலான கிராம மக்கள் தங்களது ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் உயிரிழந்த பயணிகள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.