அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்

Share

Share

Share

Share

“நழிவடைந்துள்ள சகல துறைகளும் கட்டியெழுப்பப்பட்டு, பொருளாதார ஸ்திரமிக்க நாடாக எமது நாட்டை உயர்த்த வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை என்பதை இந்நாளில் நினைவூட்டிப் பார்ப்பதே சிறந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது 75 வது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான கரங்களைப் பலப்படுத்தி, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டை சுபீட்சமானதும் வளமிக்கதுமான நாடாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் குறிக்கோளாக அமைய வேண்டும்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து நாடு விடுபட்டிருந்தாலும், இலங்கையர் என்ற சுய அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. அந்தச் சுய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக, அர்த்தபுஷ்டியுடன் பணியாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இலங்கையின் 75 ஆவது ஆண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனது மக்களுக்கு, சுதந்திரதின நல்வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்துள்ளார்.

பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...