அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 எம்.பி.க்களுக்கு முக்கிய பதவிகள்

Share

Share

Share

Share

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 எம்.பி.க்களுக்கு அமெரிக்காவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எம்.பி.க்கள், ராஜா கிருஷ்ணமூர்த்தி (வயது 49), அமி பெரா (57) , பிரமிளா ஜெயபால் (57 ), ரோகன்னா (46) ஆவார்கள். இவர்கள் 4 பேரும் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். * ராஜா கிருஷ்ணமூர்த்தி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சபையின் சீனாவுக்கான ‘ரேங்கிங்’ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் நடத்தையின் பல்வேறு அம்சங்கள், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்த விவகாரங்களை இந்தக் குழு கவனிக்கும். * அமி பெரா, முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுதான் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.ஐ.ஏ), தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகம் (டி.என்.ஐ), தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மற்றும் ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட நாட்டின் உளவுத்துறை அமைப்பின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும். * பிரமிளா ஜெயபால், பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் ‘ரேங்கிங்’ உறுப்பினராக (குடியேற்றம்) நியமிக்கப்பட்டுள்ளார். குடியேற்ற துணைக்குழுவுக்கு இவர் தலைமை தாங்குவார்.

* ரோகன்னா, சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான அமெரிக்காவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு போட்டி தொடர்பான புதிய குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேர், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் முக்கிய குழுக்களில் நியமிக்கப்பட்டிருப்பது, அந்த நாட்டின் அரசியலில் இந்திய வம்சாவளிகள் அடைந்து வருகிற செல்வாக்கை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு