அமெரிக்காவில்  திருநங்கை  நடத்திய  துப்பாக்கி சூடு

Share

Share

Share

Share

அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வில்லேயில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை சரமாரியாக சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இருப்பினும், இந்த துப்ப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 வயதுக்குட்பட்ட 3 மாணவர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து பாடசாலைக்கு விரைந்து சென்ற பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணை சுட்டுக்கொன்றனர்.

அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் துப்பாக்கி சூட்டை நடத்திய 28 வயதான ஆட்ரிஹேல் என்பதும், அவர் திருநங்கை என்பதும் தெரியவந்தது.

அதை தொடர்ந்து ஆட்ரிஹேலின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சதி திட்டம் குறித்த குறிப்புகள், பள்ளியின் வரைபடம் மற்றும் துப்பாக்கிகள் கிடைத்தன. அவர் பள்ளியில் மட்டுமல்லாமல் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அதிரவைத்துள்ளது.

“தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கி வன்முறைகள் தேசத்தின் ஆன்மாவை கிழிக்கிறது. எனவே அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் துப்பாக்கி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

 

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது