அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்

Share

Share

Share

Share

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாண தலைநகர் பேடன் ரூஜில் குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் காரில் தப்பி சென்ற நிலையில், பொலிஸாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அந்த காரை விரட்டி சென்றுள்ளனர்.

பேடன் ரூஜ் நகரின் மேற்கு பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது