அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வடகொரியா

Share

Share

Share

Share

அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை கைவிடும்படி அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதனை வடகொரியா கண்டு கொள்ளவில்லை.

 

அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா அவ்வப்போது நடத்தி, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்கமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்தி வருகிறது.

இந்நிலையில், வடகொரியா குறுகிய தொலைவு செல்ல கூடிய 2 ஏவுகணைகளை கிழக்கு கடல் பகுதியை நோக்கி இன்று செலுத்தி பரிசோதனை செய்து உள்ளது.

இதனை தென்கொரியாவும் உறுதி செய்து உள்ளது. இதுபற்றி தென்கொரியாவின் கூட்டு படைகளின் தளபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, வடகொரியாவின் சுக்சோன் பகுதியில் காலை 7 மணி முதல் 7.11 மணிக்குள் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்ட நிகழ்வை பார்த்தோம் என கூறியுள்ளார்.

நாங்கள் கண்காணிப்பு மற்றும் தீவிர மேற்பார்வை செய்து வருவதுடன், அமெரிக்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் எங்களது ராணுவம் முழு அளவில் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

 

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை