அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு

Share

Share

Share

Share

ஜனாதிபதிகள் தின விடுமுறையின் போது அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் சிக்கி பச்சிளம் குழந்தை, பிஷப் உள்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்தநாள் அங்கு ஜனாதிபதிகள் தினம் என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 3-வது திங்கட்கிழமை இது கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படும். வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிறுடன் இந்த பொதுவிடுமுறை வருவதால் அமெரிக்க மக்கள் சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று 3 நாட்களை செலவிடுவர்.

இந்த நிலையில் ஜனாதிபதிகள் தின விடுமுறையின் போது நாடு முழுவதும் அரங்கேறிய துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்காவை அதிரவைத்துள்ளது.

சிகாகோ நகரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒரு வயது பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் திருவிழா அணிவகுப்பில்  நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

அதேபோல் மிசிசிப்பி மாகாணத்தில் இரவு நேர கேளிக்கை விடுதி, சுப்பர் மார்க்கெட் உள்பட 4 வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...