இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு நிகரான உலகளவில் சிறந்த செயற்பாட்டு நாணயமாக மாறியுள்ளதாக பிரபல ப்ளூம்பெர்க் வணிக இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஒரு டொலர் சுமார் 390 ரூபாயாக பின்வாங்கும் என்று Fitch Ratings கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறுவதற்காக, வரிச் சுமைகளை அதிகரிப்பதன் மூலமும், நிவாரணங்கள் குறைப்பத்துள்ளமையினால் இலங்கையின் ரூபாய் பெறுமதி அதிகரித்துள்ளது.
எதிர்வரும் மாதங்களில் வெளிநாட்டு கடன்களை செலுத்த ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரூபாவின் பெறுமதி கடுமையான அழுத்தத்திற்குள்ளாகும் என குறிப்பிடப்படுகின்றது.