அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் – மோடி

Share

Share

Share

Share

 ‘‘உக்ரைன் போருக்கு தீர்வு காணும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது’’ என ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை சந்தித்து பேசிய பின் பிரதமர் மோடி கூறினார்.

ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸகால்ஸ் நேற்று இந்தியா வந்தார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் 4-வது முறையாக சந்தித்து கொண்டனர். இந்திய வருகை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஓலப் ஸகால்ஸ், ‘‘இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே நல்ல உறவு உள்ளது.

இதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். எங்கள் பேச்சுவார்த்தையில் இது முக்கிய அம்சமாக இருக்கும். உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து நாங்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த வுள்ளோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு உறவுகள், பிராந்திய பிரச்சினைகள், உக்ரைன் விவ காரம் உட்பட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஜெர்மன் பிரதர் ஓலப் ஸ்கால்ஸும், பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்தினர். அதன்பின் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

ஸ்கால்ஸ் அளித்த பேட்டியில், ‘‘உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுரு வியதால் உலகமே அதன் விளைவுகளை அனுபவிக்கின்றன. வன்முறை மூலம் யாரும் எல்லை களை மாற்ற முடியாது. உக்ரைன் போரால் ஏராளமான இழப்பும், பேரழிவும் ஏற்பட்டுள்ளது. இந்த போரால், ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதிக் கப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

 

பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...