தமது ஆட்சியில் அமைச்சர்களுக்கும் வழங்கப்படும் சகல வரப்பிரசாதங்களையும் இல்லாது செய்து அவர்களையும் சாதாரண அரச ஊழியர்களாக மாற்றுவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நேற்று (21) பதுளையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் இதனை கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதாகவும், முதலில் அரசியல் மைதானத்தை சுத்தம் செய்ய விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.