ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்
கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் , தரவரிசையில் 25-வது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் மோதினர் .

பரபரப்பான இந்த போட்டியில் முதல் சுற்றை எலினா ரைபகினா கைப்பற்றினார் . பின்னர் சிறப்பாக விளையாடிய அரினா சபலென்கா அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார்.

இதனால் 4 – 6, 6- 3, 6 – 4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இது அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *