கனடாவில் டிக் டாக் பிரபலமான சிறுமி ஒருவருக்கு அரிய வகை குடல் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பது வயதான பெல்லா தொம்சன் என்ற இந்தச் சிறுமிக்கு தற்பொழுது குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறுமி பிறந்ததில் இருந்தே குடல் உபாதையினால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிறந்தது முதல் குறித்த சிறுமி குடல் உபாதையினால் பாதிக்கப்பட்டு பெரும் அசவுகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்.

இந்த சிறுமி டிக் டாக்கில் சுமார் 6.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறுமியின் சமீபாட்டுத் தொகுதியில் பிரச்சனை காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *