சீனத் தயாரிப்பு கண்காணிப்பு கெமராக்களை, அவுஸ்திரேலியாவின் அரச கட்டடங்களிலிருந்து அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியன நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அரசின் 200 இற்கும் அதிகமான கட்டடங்களில் 900 இற்கு அதிகமான சீனத் தயாரிப்பு கண்காணிப்புக் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறைந்தபட்சம், அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சின் ஒரு கட்டடத்திலும் சீனத் தயாரிப்பு கெமரா பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி கெமராக்கள் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை என தவவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனங்கள் அமெரிக்காவின் கறுப்புப பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள உய்குர் மக்களை உளவு பார்ப்பதற்கு இக்கெமராக்கள் பயன்படு;ததப்பட்டதாக செய்திகள் வெளியானயடுத்து, இக்கெமராக்களை தடை செய்ய வேண்டும் என பிரித்தானிய எம்பிகள் பலர் பிரித்தானிய அரசை வலியுறுத்தியிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *