றொரன்டோ பெரும்பாக பகுதியில் இந்து ஆலயங்களை இலக்கு வைத்து அண்மைய நாட்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இவ்வாறு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண் இவ்வாறு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நான்கு தடவைகள் இந்து ஆலயங்கள் மீது பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மிஸ்ஸாகுவா பகுதியில் ராமர் ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
ஆலய வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள், குரோத உணர்வை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் வெறுக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்து சமூகத்தினர் மீது இவ்வாறான குரோத வன் செயல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல எனவும் இது ஓர் இழிவான செயல் எனவும் மேயர் பிரவுன் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு இன சமூகத்தின் மீதும் குரோத அல்லது வெறுப்பு உணர்வுடனான வன்முறைகள் அடக்குமுறைகள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.