1000 மடங்கு அதிகமான பனிப்பாறைகளை இமயமலை கடந்த 20 வருடமாக இழந்து வருவதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இமயமலை இயற்கையின் அருட்கொடைகளில், ஒன்று என்று கூட சொல்லலாம். அப்படிப்பட்ட இந்த இமயமலையில் ஏராளமான பனிப்பாறைகள் உள்ளன.

இந்த பனிப்பாறைகள் மூலமாகத்தான் கோடானக்கோடி மக்கள் குடிநீர் ஆதாரங்களை பெற்று வருகின்றனர்.

ஆனால் உலக வெப்பமயமாதலால் இந்த பனிப்பாறைகள் வேகமாக அதுவும் இரு மடங்கு வேகமாக உருகத்தொடங்கி இருக்கின்றன.

அந்த வகையில் ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக, இமயமலையில் பனிப்பாறைகளின் அதிகபடியான இழப்பை ஆவணப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இணைந்து நடத்திய ஆய்வில் 2000 முதல் 2020 வரை இப்பகுதியில் உள்ள ப்ரோக்லேசியல் ஏரிகள் எண்ணிக்கையில் 47 சதவீதமும் பரப்பளவில் 33 சதவீதமும், அளவு 42 சதவீதமும் அதிகரித்தன.

இதனால் நிலப்பரப்பின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள பனிப்பாறைகள் அதிகபடியாக உருகி வருவதாகவும் இது சுமார் 57 கோடி யானைகளின் எடைக்கு சமம் அதாவது உலகில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கையை விட 1000 மடங்கு அதிகம் என்று கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய இமயமலையில் மிகப்பெரிய அளவில் உருகிவரும் பனிப்பாறைகள் குறித்து மதிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு பனிப்பாறை உருகுவதால், அருகிலுள்ள ஏரியில் நீர்வரத்து மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *