பிரித்தானியாவின் முன்னாள் மகாராணி இரண்டாம் எலிசபத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்ற கனேடிய பிரதமருக்கு எதிராக விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உள்ளிட்ட கனேடிய பிரமுகர்கள் ஹோட்டலில் தங்குவதற்காக மட்டும் 400,000 டொலர்களை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் தேம்ஸ் நதியை கண்டு களிக்கக் கூடிய வகையிலான ஹோட்டல் அறையொன்றின் ஓர் இரவிற்கான கட்டணம் 6000 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் மீது விமர்சனங்கள்

மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பிரித்தானிய பிரதமர் ட்ரூடோ, அவரது பாரியார், ஆளுனர் நாயகம் மேரி சிமோன், முன்னாள் பிரதமர்களான கிம் கெம்பல், ஜீன் சேர்டின், போல் மார்டின், ஸ்டீபன் ஹார்பர், ஒலிம்பிக் வீரர் மார்க் திவோக்ஸ்பெரி மற்றும் நடிகர் சென்ட்ரா ஓஹ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் அமைந்துள்ள முன்னணி ஹோட்டல்களில் ஒன்றான Corinthia ஹோட்டலில் பிரதமர் உள்ளிட்டவர்கள் தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் பணத்தை பாரியளவில் செலவிட்டுள்ளதாக பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *