கிரேக்கத்தின் வட பகுதியில் இரு ரயில்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லரிஸ்ஸா(Larissa) நகருக்கு அருகே நேற்று(28) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சுமார் 350 பயணிகளுடன் பயணித்த ரயிலொன்று சரக்கு ரயிலொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தினால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் சுமார் 150 தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதுவொரு நிலநடுக்கம் போன்றது என பயணி ஒருவர் உள்ளூர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.