ரிப்பாஸ் 

இன நல்லிணக்கமானது அண்மைக் காலமாக உலக நாடுகளிடையேயும் இலங்கை நாட்டிற்குள் வாழும் மக்களிடையே பேசப்பட்டு வரும் வர்த்தையாக இன நல்லிணக்கம் காணப்படுகின்றது குறிப்பாக இலங்கை போன்ற பல்லினம் வாழும் பல மொழி பேசும் நாட்டில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது அதற்கான காரணம் இனங்களுக்கிடையில் நீண்ட காலமாக சுமார் 30 வருடகாலமாக யுத்தத்தினால் முரண்பாடு காணப்பட்டது அந்த வகையில் யுத்த நிறைவடைந்த பின்னர் மக்களிடையே புரிந்துணர்வு சக வாழ்வு சமத்துவம் சமாதானம் போன்ற எண்ணக்கரு தோற்றம் பெறுவதையும் சமத்துவத்துடன் வாழப் பழகுவதை காணலாம்.

.

இலங்கையில் முப்பது வருடங்களாக ஏற்பட்ட யுத்தத்தின் விளைவாக மக்கள் மத்தியில் சரியான புரிந்துணர்வு இல்லாமல் காணப்படுகின்றது அதனை கட்டியெழுப்புவதற்கு அரசு மற்றும் அரச சார்பற்ற பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்ற போதிலும் அதற்கான சரியான வழி ஒன்றை ஏற்படுத்த முடியாமலுள்ளது.

 

அந்த வகையில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் எழுத்தாணி பேரவையினால் சம காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இரண்டாம் மொழி கற்கை நெறி ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்திவருகின்றனர் இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தழிழ் ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கு தழிழ் மொழயும் பயிற்றப்படுகின்றது. தனித்தனி வகுப்புக்களாக நடைபெற்றாலும் இவர்களுக்கான வகுப்புக்கள் தமிழ், சிங்கள வகுப்புக்கள் ஒன்றாகவும் நடத்தப்படுகின்றது இதனால் தமிழ்,சிங்கள ஊடகவியலாளர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு சமத்துவம் சகவாழ்வு போன்றன கட்டியெழுப்பப்படுகின்றது.

 

ஆரம்பத்தில் அயன்ன ஆயன்ன தெரியதவர்களாகவும் அரவே அ, ஆ தெரியாதவர்களும் இப்பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள் ஆரம்ப வகுப்பில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NILET) பணிப்பாளர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார் அதில் மொழியை கற்பதற்கு இருக்கக் கூடாத மூன்று சொற்களை கூறினார் 1.லெச்சாவ – வெட்கம் 2.கம்பலிக்கம – சோம்பல் 3.பய – பயம் மொழியை ஆர்வத்துடன் கற்பதற்கு இருக்க வேண்டிய மூன்று சொற்களை கூறினார் 1.ஆசாவ – ஆசை 2. உட்சாகய -உட்சாகம் 3. விஸ்வாசய – நம்பிக்கை இது போன்ற ஆறு சொற்களையும் ஆர்வத்துடன் அறிந்து கொண்டார்கள்.

அது மாத்திரமல்லது சமூக நல்லிணக்க பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக சிங்கள ஊடகவியலாளர் வீட்டிற்கு தமிழ் ஊடகவியலாளர் கள விஜயம் செய்து சுமார் ஆறு மணி நேரம் அவர்களுடன் கலாச்சாரம் தொடர்பாகவும் சமயம் தொடர்பாக கலந்துரையாடி இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது
அந்த செயற்பாட்டை ஆங்கிலத்தில் SOCIAL GATHERING சமூக ஒன்றுகூடல் இதற்கான விளக்கம் “இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்கள் எந்த நோக்கத்துக்காகவும் ஒன்று கூடுவதைக் குறிக்கும். கலந்து கொள்பவர்கள் நெருங்கிய குடும்பத்தை சேர்தவர்களாக இருக்கக் கூடாது” இவ்வாறு சமூக ஒன்று கூடலில் ஈடுபட்ட இரண்டாம் மொழி கற்கும் ஊடகவியலாளர்களிடம் மத்தியில் எண்ணற்ற பல தார்பாரியங்களை ஏற்படுத்தியது அவர்களின் அனுபவபகிர்விலிருந்து சிலவற்றை கூறலாம்.

 

சிந்துஜா :- இன்றைய நாளானது வாழ்கையில் மறக்கமுடியாத நாளாக இருந்திச்சி அதனை ஏற்பாடு செய்து வழங்கியதற்கு எழுத்தாணி கலை இலக்கிய பேரவைக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். காலையில் நான் களப்பயணத்தை ஆரம்பிக்கும் போது பயத்துடனும் பதற்றத்துடன் போனேன் சிங்கள ஆட்களின் முதல் நாள் போறோம் என்ன நடக்குமோ என்ன நடக்குமோ ஆறு மணித்தியாலயம் எப்படி போக போகின்றது என்று பயந்து பயந்து போனேன் ஆனால் அங்கு நான் வாசலில் போனவுடன் வரவேற்று அவர்களின் அன்பான வார்த்தைகளாலையும் சிங்களம்,தமிழ் கலந்து அழகாக கதைத்தார்கள் அப்போது அந்த கதையில் நல்ல சந்தோஷமாக இருந்தது பயத்துடன் போன நான் வாசலிலே பயம் இல்லாமல் போயிடுச்சி அதன் பின்னர் வீட்டினுள் போன பிறகு என்னை வீட்டின் ஒராலாகதான் நினைத்தார்கள் புது ஆக்கள் வந்திருக்காங்க என்றில்லாமல் நன்றாக கவனித்தார்கள் வீட்டில் ஓருவராக அக்கா தங்கச்சியாக நினைத்து கதைத்தார்கள் அவர்களின் கலாச்சாரம் காலை எழுந்து தூங்கு மட்டும் எப்படி செய்வார்கள் வழிபாட்டு முறைகள் சமய முறைகள் போன்ற எல்லாவற்றையும் சொல்லித் தந்தார்கள் இள்றை நாள் பிரயோசனமான நாளாக இருந்தது என்று சொல்லலாம் எப்படி நேரம் போனது கூட தெரியவில்லை ஆறு மணி நேரம் டக் டக் என்று போயிட்டு அதனை மாதிரி இன்னொரு சந்தர்ப்பம் கிடையாத என்ற ஏக்கத்துடன் கூறி முடித்தாள்

நஜீப் :’மொழியை வைத்துக் கொண்டு இரத்தத்துரடன் இரத்தமாக நெகம் போல் சதையாக பழகக் கூடிய அன்பான உறவுகளை பிரித்துவிட்டார்கள் அன்றைய புரிந்துணர்வில்லாத சமூகம் என்பதை இன்றைய ஆறு மணித்தியாலயப் பயணம் மனிதர்கள் அனைவரும் ஒரே உணர்வுடன் ஒரே உணர்வுமிக்க இறைவனின் ஒரு படிப்பே என்பதை இன்று அறிந்து கொண்டோம’;

நிகிதன் :- ‘அவர்களுக்கே உரித்தான அந்த வரவேற்பு முறை விருந்தோம்பலில் முந்தியடித்துக் கொள்ளும் அந்த மனசும் அவர்களோடு எப்பவுமே கூடவே இருக்கும். இதை இன்றும் நான் வியந்து மனதுக்குள் பாராட்டியிருக்கிறேன் இனிமையான வார்த்தைகளை இன்முகத்தோடு .வர்களால் மட்டும் எப்படி இன்றளவும் பேசமுடிகிறது. அன்பினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். கூடி வாழுவோம் அனைவரும் கோடி இன்பம் பெறுவோம்.’ என்று கவி வடிவில் பகிர்ந்தார்.

இப்றாஹிம் :- உண்மையான அன்பு கலந்த பாசமான உறவுகலோடு இன மத மொழிக்கு அப்பால் அழகான முறையில் உரையாடி கருத்துக்களை பரிமாறி அவர்களுடைய கலாச்சார விழுமியங்கள் விருந்துபசாரங்கள் ஏனைய விடயங்களில் சிறப்பான முறையில் ஈடுபற்றிருந்தது மிகவும் மகிழ்சியாக இருக்கின்றது அத்துடன் இக்களப்பயணத்தை ஏற்பாடு செய்து தந்த எமது எழுத்தாணி கலை இலக்கிய பேரவையின் தலைவர் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இது போன்று சந்தர்பம் வேறு ஏதும் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றோம்.

இது மாத்திரம் அல்லது இதனை விட இன்னும் சுவாரிசமான விடயங்கள் எனக்கு ஏற்பட்டது அதனையும் பகிரலாம் என்று நினைக்கின்றேன் ‘ நான் சமூக ஒன்று கூடலுக்கு முன்னர் நடைபெற்ற வகுப்பில் கலந்து கொள்ளவில்லை அன்று மாலை ஹாய் நான் கயானி என்றும் பின்னர் சில நேரத்தின் பின்னர் ஹலோ அண்ணா நாளைக்கு நம்ம வீட்டுக்கு வருவாய ஒயா கெட்ட அபே கெதர எனவத எழுத்தாணி தமிழ் மங் சிங்கள க்லாஸ் எகன் ஒரு செய்தி சொன்னாயா பனிவிடையக் கிவ்வாத நான் பதில் கூறுகையில் நங்கி மம ரிபாஸ் கத்தாக்கரனவா கெட ஒயா கெதர எனவா கியதட என்டோஓன விஸ்தர பொட்டாக் கியண்ட அத கிலாஸ்ஸக்க யன்னே விஸ்தர எயாலா கிவ்வா கந்தலே கொய்த பஸ் ஸ்டாண்டக்கத விஸ்தர பொட்டாக் கியனவானாம் கரி பதில் கூறுகையில் மம கந்தலே நெம மம மஹ்தில்வௌ என்று கூறினாள்

அடுத்த நாள் காலையில் எட்டு மணிக்கு கோல் வந்தது ‘அண்ணா எனவத’ நான் கூறினேன் எனவா என்று தயக்கமும் பயமும் பதற்றமும் தனி சிங்களம் என்று மனதை உறுத்தியது துணைக்கு அக்காவின் மகனையும் அழைத்துக் கொண்டு சென்று சேர்ந்தேன் வீடு தெரியவில்லை சிங்கள சகோதரி வீதிக்கு வந்து அய்யா எண்ட என்று அழைத்து சென்றால்.

வீட்டிலிருந்தவர்கள் தம்பி வாங்க எப்படி சுகம் என்று கேட்டனர் நல்ல சுகம் என்று பதில் சொல்விட்டு பார்ஸலை கொடுத்து போட்டோ எடுத்தேன் சில நேரங்கள் சிங்களம் தமிழ் கலந்து கதைத்து கொண்டிருக்கும்போது காலை உணவுக்கு அழைத்தனர் காலை உணவு சாப்பிட்டுவிட்டு விகாரை குளம் போன்ற வற்றை பார்த்து விட்டு பகல் சாப்பாடும் சாப்பிட்டு விட்டு சமயம் சார்ந்த மற்றும் தமிழ் சிங்கள முஸ்லிம் போன்ற நட்பு தொடர்பாக கலந்துரையாடினேன்.

ஆறு மணி நேரம் கழிந்தது அன்று அங்கு கழித்த நேரம் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நாளாக மனதில் பதிந்தது வீட்டிற்கு வருவதற்கு வெளிக்கிடும் போது வெளியில் வெள்ளை பேக்கில் மாங்காய் தேங்காய் பலாப்பழம் பார்சல் பண்ணி தந்தார்கள் நானும் போயிற்று வருகின்றேன் என்று கூறி விடைபெற்றேன்.

ஓரு சில வாரத்தின் பின்னர் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் ஒன்றாக கண்டிக்கான EXPOSURE VISIT வெளிக்கள விஜயம் மேற் கொண்டோம் EXPOSURE VISIT – வெளிக்கள விஜயம் என்பதன் விளக்கம் ‘ஒரு இடத்தில் வசிப்பவர்கள் மற்றொரு இடத்திற்கு சென்று மற்ற சமூகத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளை அவதானித்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன இதன் வெளிப்பாடு வகைகளின் நோக்கம் , உங்கள் சொந்த சமூகத்துக்கு வெளியே உள்ள மற்றவர்களின் அனுபவத்திலிருந்து நேரடியான தொடர்பு மூலம் கற்றுக் கொள்வதாகும்’ வெளிக்கள விஜயத்தின் நோக்கமாக இருந்தது அந்த வகையில் திருகோணமலையிலிருந்கு 2023.08.06 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு புறப்பட்டு கண்டியில் காலை 10.00 க்கு சேர்த்தோம்

மலையக ஊடகவியலர்களான 1. சான சேனவிரத்ன (விஜய பத்திரிகை கண்டி ஊடகவியலாளர்) 2.முகம்மது ஆசிக் (லங்கா தீப பத்திரிகை கண்டி ஊடகவியலாளர்) 3.ஏ.நிவேதா வீரகேசரி பத்திரிகை) 4.ஆர் சேகர் கம்பொல ஊடகவியலாளர்) 5.ஐ.எம்.ஜீ.வி.இலங்கன்திலக 6.சிவலிங்கம் விவக்குமாரன் 7.சுப்ரமனியம் தியாகு 8.எம் ராமச்சந்திரன் 9.ஜீவா சதாசிவம் (தமிழ் முரசு பத்திரிகை ஆசிரியர்) போன்ற மூத்த ஊடகவியலாளர்களுடன் இரண்டாம் மொழி அறிவும் வாழ்கையில் அனுபவித்த அனுபவ பகிர்வை எங்களுடன் சிலவற்றை பகிர்ந்து கொண்டனர்.

ஐ.எம்.ஜீ.வி.இலங்கன்திலக ஊடகவியலாளர் கூறுகையில் :- இரண்டாம் மொழித் தமிழ் கற்றுக் கொண்டது கடைகளில் போடப்பட்ட பெயர்ப் பலகைகளை வாசித்து வாசித்து ஓரளவுக்கு எழுதவும் வாசிக்கவும் பழகியதாக கூறினார் மேலும் தேரிவிக்கையில் தமிழர்கள் ஆச்சரியப்படும் வகையில் தான் தமிழ் பேசுவதாகவும் தன்னுடைய கடைக்கு வருபவர்களுக்கு தமிழில் கணக்கு எழுதிக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்

சுப்ரமனியம் தியாகு ஊடகவியலாளர் கருத்துத் தெரிவிக்கையில் ‘நான் அமைச்சுக்களில் கடமையாற்றும் போது பல சிங்கள கடிதங்கள் வரும் எனக்கு அதனை படிக்கத் தெரியாது இரண்டாம் மொழி சிங்களத்தை கற்றதன் பின்னர் சிங்கள சகோதர்களுக்கு கூட சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு என்னால் முடியும் இது போன்ற பல கருத்துக்களை பகிர்ந்தார்

ஜீவா சதாசிவம் கருத்துத் தெரிவிக்கையில் ‘ நான் சிங்களத்தை பௌத்த மத குருவான பிக்குவிடம் கற்றுக் கொண்டேன் இதனால் நான் பணியற்றும் நிறுவனத்திற்கு வருகின்ற சிங்களம் தொடர்பான பிரச்சினைகளை இயன்றளவுக்கு தீர்த்துக் கொள்ள கூடியதாகவுள்ளது அத்துடன் கொழும்பில் வாழ்வதாக இருந்தால் சிங்களம் தெரியாமல் இருக்க முடியாது வீட்டைவிட்டு வெளியில் இறங்கினால் சிங்களதில் தான் கதைக்க வேண்டும். என தெரிவித்தார்

இவ்வாறு பங்கு பற்றிய பலர் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்தாலும் எங்களிலிருந்து பங்கு பற்றிய இருவர் சிங்களத்தில் சில வார்த்தைகளை கதைத்ததோடு சிங்கள பாட்டும் சிங்கள சகோதர்கள் தமிழ் பாட்டும் பாடி அழுப்பில்லாமல் அரங்கை அலங்கரித்தனர். பங்கு பற்றிய ஊடகவியலாளர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இலங்கையில் இரண்டாம் மொழி கற்கையில் இந்நிகழ்வு ஒரு மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு அருமையான அனுபவத்தை தந்தது
இன நல்லிணக்கத்துக்கு சிங்கள சகோதரர்களுடன் கதைத்து பழகும் போதுதான் அவர்களின் நடத்தை பாசம்,பண்பாடு அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். அதற்கு இரண்டாம் மொழி இன்றியமையாதது என்பதில் எந்த சந்தேகமுமில்லை ஒழுங்கான தொடர்பாடல் ஏற்படவேண்டுமானால் சிங்களவர்களுக்கு தமிழும், தமிழர்களுக்கு சிங்களத்தையும் கட்டாயமாக்கவேண்டும் இதனை ஆரம்பக் கல்வியில் கட்டாய பாடமாக்க வேண்டும்.
அரச உத்தியோகத்தகளுக்கு தேசிய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று சுற்றுநிரூபம் இருக்கின்றது ஆனால் அதனை பதவி உயர்வுக்காக மாத்திரம் படிக்கின்றனர் இதனை மாற்றி அனைவருக்கும் அடிப்படையிலிருந்து இரண்டாம் மொழியை வழங்க வேண்டும் இவ்வாறு செய்கின்ற போது இன முரண்பாடு இல்லாது ஒழிக்க முடியும் இது இன்றைய காலத்தின் தீர்வுத்திட்டமாக கூட அமையும் அரசு இதனை அவசரமாகவும் அவசியமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அறுதியாகவும் இறுதியாகவும் கூறுவது என்னவென்றால் இரண்டாம் மொழி தெரியாமல் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாடு இவ்வாறு இரண்டாம் மொழியை கற்கை நெறியை ஏற்பாடு செய்த எழுத்தாணி கலை இலக்கிய பேரவைக்கும் அதன் தலைவர் ராஜ்குமார்க்கும் நன்றி தெரிவித்து முற்றுப்புள்ளி வைக்கின்றேன்.

 

அப்துல் றசாக் முகம்மது ரிபாஸ்(BA)
கிண்ணியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *