இலங்கையில் விமான சேவைக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவை

Share

Share

Share

Share

தற்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பணியாற்ற வேண்டிய 56 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் பணியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\

உண்மையில் இலங்கையில் விமான சேவைக்கு குறைந்தது 138 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது 82 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மாத்திரமே சேவையில் இருப்பதாகவும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு 25 புதிய பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்கள் தொழில் நிபுணத்துவம் பெறுவதற்கு சுமார் 10 வருடங்கள் ஆகும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிகமாக, இலங்கை விமானிகளும் அதிக எண்ணிக்கையில் சேவையை விட்டு வெளியேறுகின்றவதாக தெரியவந்துள்ளது.

தற்போது இலங்கை சேவையில் இருக்க வேண்டிய 250 விமானிகளில் 44 பேர் பணியை விட்டுவிட்டு வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

 

 

 

 

 

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...