(  நூரளை பி. எஸ். மணியம்)
நுவரெலியாவில் நீண்ட காலமாக இயங்கி வந்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் நுவரெலியா மாவட்ட காரியாலய த்தை இடம் மாற்ற வேண்டாம்.பொது அமைப்புகள் கோரிக்கை!
தற்பொழுது நுவரெலியாவில் இயங்கிவரும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கிளை காரியாலயத்தை அட்டன் நகருக்கு மாற்ற இலங்கை  மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நுவரெலியா காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம். என நுவரெலியாவில் இயங்கிவரும் 13 பொது அமைப்புகள் பிரதிநிதிகள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள நுவரெலியா -மஸ்கெலியா, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய தொகுதிகளில் வாழும் மக்களுக்கு ஒரு மத்திய இடமாக நுவரெலியா காரியாலயம் இருக்கின்றது.
இங்குள்ள மனித உரிமை ஆணைக்குழு நுவரெலியா மாவட்ட  காரியாலயத்துக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து அனைத்து பிரதேச மக்களும் வருகை தந்து தங்களது தேவைகளை இலகுவான முறையில் பூர்த்தி செய்து கொண்டு வந்துள்ளனர்.
 இந்த நுவரெலியா  காரியாலயத்தை அட்டன் நகருக்கு மாற்றினால் வலப்பனை ஹங்குராகெத்த போன்ற பிரதேச மக்கள் நுவரெலியாவிற்கு வருகை தந்து இங்கிருந்து அட்டன் சென்று மீண்டும் வலப்பனை ஹங்குராங்கெத்த போன்ற பிரதேசங்களுக்கு திரும்பி செல்வதற்கு மக்களுக்கு சிரமமாக இருப்பதால் இந்த காரியாலயத்தை நுவரெலியாவிலே இயங்க செய்யும்படி நுவரெலியாவில் இயங்கும் 13 சமூக அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கையொப்ப மிட்டு கோரிக்கை கடிதங்களை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலைவர் எல்.டி. பீ. தெய்தெனிய அவர்களுக்கும் ஆணையாளர்களான நிமலசேன கார்த்திய புஞ்சிஹேவா, நய்யமுத்து தனராஜ், விரிவுரையாளர் பாத்திமா பர்ஸானா ஹனிபா, விரிவுரையாளர் கெயான் தினுக் குணதிலக்க ஆகியோருக்கு இந்த கோரிக்கை  கடிதங்களை அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.
நுவரெலியா லயன்ஸ் கழகம், நுவரெலியா ரோட்டரி கழகம், நுவரெலியா வை எம் எம் ஏ (Y M M A) கழகம்,  நுவரெலியா ஐக்கிய சர்வமதம் சங்கம், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக்குழு, வொயிஸ் ஓப் நுவரெலியா, மார்ச் 12அமைப்பு, நுவரெலியா ஐக்கிய வர்த்தக சங்கம், நுவரெலியா மாவட்ட சிவசக்தி பவுண்டேஷன், நுவரெலியா தேசிய பெண்கள் அமைப்பு, நுவரெலியா சமாதான நீதவான் சங்கம், சிவில் பாது காப்பு அமைப்பு,நுவரெலியா மனித அபிவிருத்தி சங்கம், நுவரெலியா சமாதான பேரவை ஆகிய 13 பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம். என கையோப்பமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *