(நூரளை பி. எஸ். ரமணன்)
நுவரெலியா, ஹவாஎலியா, சந்ததன்ன பிரதேசத்தில் சர்வதேச தரத்திற்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கை வனவியல் கல்வியகம் (Sri Lanka Forestry Institute) நேற்று முன் தினம் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
53 ஹெக்டெயர் பரப்பளவில் இந்த நிறுவனம் 1500 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் , சர்வதேச வனவிலங்கு , சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த வனவியல் நிறுவனத்தில் பயிற்சி பெறலாம். வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் வருமானத்தை பெறக்கூடிய கல்வியை ஆரம்பிக்கவும், சுற்றுச்சூழல், காடுகளை விரும்புவோருக்கு அந்த கல்வியை கற்பதற்கும் வாய்ப்பை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
இதன்படி  பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பாடசாலையை விட்டு வெளியேறுபவர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பாடநெறிகளில் சேர முடியும்.
வளாகத்தில் 17 உத்தியோகபூர்வ குடியிருப்புகள், ஒரு விளையாட்டு அரங்கம், 80 பேர் தங்கக்கூடிய ஒரு தங்குமிடம், ஒரு நேரத்தில் 150 பேர் தங்கக்கூடிய ஒரு உணவகம், ஒரு ஒடிட்டோரியம், ஒரு நிர்வாக கட்டிடம், விரிவுரை மண்டப வசதிகள், ஒரு நூலகம், ஒரு வாகன நிறுத்துமிடம் மற்றும் பல வசதிகள் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *