இஸ்ரேல் மோதலின் போது அமெரிக்க படையினர் எவரேனும் தாக்கப்பட்டால்….?

Share

Share

Share

Share

ஹமாஸ் இஸ்ரேல் மோதலின் போது அமெரிக்க படையினர் எவரேனும் தாக்கப்பட்டால் அமெரிக்கா திருப்பி தாக்குவதற்கு தயார் என அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

என்பிசியின் மீட் த பிரசில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள பிளிங்கென், ஈரான் ஆதரவு சக்திகளால் மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த மோதலின் போது அமெரிக்க படையினர் இலக்கு வைக்கப்பட்டால் அதற்கான பதில் நடவடிக்கையில் ஈடுபட பைடன் நிர்வாகம் தயாராகவுள்ளது எனவும் பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹமாசுடான யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் காசாவை ஆட்சி செய்வதற்கு இஸ்ரேல் விரும்பவில்லை என தெரிவித்துள்ள பிளிங்கென், யுத்தத்தின் பின்னர் ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நிலையை எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

காசா பள்ளத்தாக்கிலிருந்து ஹமாசின் தாக்குதலை எப்போதும் எதிர்கொள்ளும் நிலையில் இஸ்ரேல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

ஹமாஸ் மீண்டும் இதே நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும். அதேவேளை காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆட்சி செய்யாத நிலை வேண்டும் அவர்கள் அதனை விரும்பவில்லை எனவும் பிளிங்கென் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்