எம நாசீர்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  மூத்த ஊடகவியலாளரான வி.என்.மதியழகன் அவர்களின்  ” சொற்கோ வி.என்.மதியழகன்” நூல்  நேற்று புத்திஜீவிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

கொழும்பு தமிழ்ச் சங்கம் – சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைப்பெற்ற இவ் வெளியீட்டு விழாவான புரவலர் ஹாசிம் உயர் அவர்கள்
(ஆலோசகா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) முன்னிலையில் இடம்பெற்றது.

விழாவிற்கு எழுத்தூடாக விற்பன்னர் அனந்த் பாலகிட்ணர் அவர்கள் தலைமை வகித்தார்.

 

பிரதம விருந்தினராக
.மா. தவயோகராஜா (தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்)

சிறப்பு விருந்தினர்களாக கே.ஜி. லோகேஸ்வரன் முன்னாள் மேல் மாண ஆளுநர், தொலைத்தொடர்பு. தபால். ஊடக அமைச்சின முன்னாள் செயலாளர்) பேராசிரியர் நுரை மனோகரன் அவர்கள் (முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர். பேராதனை பல்கலைக்கழகம்) அருண் டயஸ் பண்டாரநாயக்க (வானொலி, தொலைக்காட்சி ஒலி-ஒளிபரப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும். அதிவணக்கத்துக்குரிய பிதா/ அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்ணான்டோ அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

 

மேலும் ஊடகங்களின் ஆசிரியர்கள் கவிஞர்கள் , மதியழகனின் ரசிகர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *