ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பின்னணியில் இருந்தவர்கள் வௌிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் – உதயா எம்பி வலியுறுத்தல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பின்னணியில் இருந்தவர்கள் வௌிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் – உதயா எம்பி வலியுறுத்தல்

(பழனி.விஜயகுமார் )

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டித் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இன்று அனுஸ்டிக்கப்படும் கருப்பு ஞாயிறு திட்டத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கம் பூரண ஆதரவு அளித்தது என்றும் தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் வௌிச்சத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் தொழிலாளர் தேசிய சங்கம் உறுதியாக இருக்கிறதென மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

administrator

Related Articles