உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.

ரஷியா, உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியதன் தொடர்ச்சியாக 2022 Febuary 24ம் திகதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது.

இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் நீடித்த அமைதி திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 141 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

எதிர்த்து 7 பேரும் வாக்களித்தனர்.

இந்தத் தீர்மானத்தின் மீது சீனா, இந்தியா உள்பட 32 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *